வெளிநாட்டு தலையீட்டை எவ்வாறு புகாரளிப்பது How to report foreign interference

நியூசிலாந்தில் உள்ள இன சமூகங்கள் வெளிநாட்டு தலையீட்டை பொறுத்துக்கொள்ள வேண்டியதில்லை. கீழே உள்ள விருப்பங்களைப் பயன்படுத்தி வெளிநாட்டு குறுக்கீட்டைப் புகாரளிக்கலாம்.

நியூசிலாந்தில் உள்ள இன சமூகங்கள் வெளிநாட்டு தலையீட்டை பொறுத்துக்கொள்ள வேண்டியதில்லை. கீழே உள்ள விருப்பங்களைப் பயன்படுத்தி வெளிநாட்டு குறுக்கீட்டைப் புகாரளிக்கலாம்.

 

ஒரு அவசர காலத்தில்

அது இப்போது நடந்து கொண்டிருந்தால், 111-ஐ அழைத்து காவல்துறையைக் கேளுங்கள்.

உங்களால் பேசமுடியாமல் செல்போனில் இருந்தால், அமைதியாக இருந்து ’55-ஐ அழுத்தவும்’ என்ற அறிவுறுத்தலுக்காக காத்திருங்கள்.

உங்களால் பேசமுடியாமல் லேண்ட்லைன் ஃபோனில் இருந்தால், அமைதியாக இருந்து ஆபரேட்டர் உதவிக்கு ஏதேனும் பட்டனை அழுத்துமாறு உங்களுக்குச் சொல்லுவதை கவனியுங்கள்.

 

வெளிநாட்டு தலையீட்டைப் தெரிவித்தல் 

NZSIS அல்லது காவல்துறையிடம் தெரிவிப்பதன் மூலம் நியூசிலாந்தை வெளிநாட்டு தலையீட்டிலிருந்து பாதுகாப்பாக வைத்திருக்க நாம் அனைவரும் உதவலாம். நீங்கள் எந்த வழியை தேர்வு செய்தாலும், உங்கள் தகவல் சரியான இடத்திற்கு செல்வதை அவர்கள் உறுதி செய்வார்கள்.

NZSIS-க்கு வெளிநாட்டு தலையீட்டை தெரியப்படுத்தவும்

NZSIS இணையதளத்தில் பாதுகாப்பான ஆன்லைன் படிவத்தைப் பயன்படுத்தி வெளிநாட்டு தலையீட்டை தெரியப்படுத்த முடியும்.

நீங்கள் விரும்பவில்லை என்றால், உங்கள் பெயர், தொலைபேசி எண் அல்லது தொடர்பு விவரங்கள் போன்ற தனிப்பட்ட தகவல்களை கொடுக்க வேண்டியதில்லை. உங்கள் சொந்த மொழியிலும் நீங்கள் படிவத்தை பூர்த்தி செய்யலாம்.

நீங்கள் NZSIS-இல் யாரிடமாவது பேச விரும்பினால், +64 4 472 6170 அல்லது 0800 747 224 என்ற எண்ணில் அவர்களை அழைக்கலாம்.

NZSIS உங்கள் அறிக்கையைப் பார்க்கும்போது, அவர்கள் அதைச் சரிபார்ப்பார்கள். உங்கள் தொடர்பு விவரங்களை கொடுத்திருந்தால், கூடுதல் தகவல் தேவைப்பட்டால் மட்டுமே NZSIS உங்களைத் தொடர்புகொள்ளும். NZSIS உங்களைத் தொடர்பு கொள்ளவில்லை என்றால், அவர்கள் உங்கள் புகாரைப் புறக்கணித்ததாக அர்த்தமில்லை.

வெளிநாட்டு தலையீட்டை காவல்துறைக்கு தெரிவிக்கவும்

இது ஒரு அவசரம் இல்லை என்றால், நீங்கள் காவல்துறையை தொடர்பு கொள்ளலாம்:

  • ஆன்லைன் 105 படிவத்தைப் பயன்படுத்தி
  • எந்த மொபைல் அல்லது லேண்ட்லைனில் இருந்தும் 105-ஐ அழைக்கவும், இந்த சேவை இலவசம் மற்றும் நாடு முழுவதும் 24/7 கிடைக்கும்

படிவம் 105 உங்கள் புகாரைச் செயல்படுத்துவதற்கும் உங்களைப் மேலும் விசாரிக்கவும் காவல்துறைக்கு உதவ உங்கள் தனிப்பட்ட தகவல்களைக் கேட்கிறது. காவல்துறை இந்த தகவலை அனுமதிக்கப்பட்ட நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்துகிறது.

 

இத்தகவலை பதிவிறக்கம் செய்யுங்கள்

Last modified: