இந்த பக்கத்தில்
இந்த மாற்றம் குறித்து நீங்கள் உங்கள் கருத்தை தெரிவிக்கலாம்.
கீழே உள்ள தகவல்கள் அரசாங்கம் என்ன செய்கிறது மற்றும் நீங்கள் எவ்வாறு ஈடுபடலாம் என்பதை விளக்குகிறது.
என்ன நடக்கிறது?
வெளிநாட்டு தலையீட்டிற்கு காவல்துறை மற்றும் பிற நிறுவனங்களுக்கு உதவ குற்றவியல் சட்டத்தை அரசாங்கம் வலுப்படுத்தி வருகிறது.
குற்றங்கள் (வெளிநாட்டு தலையீட்டை எதிர்த்தல்) திருத்த மசோதா மூலம் இந்த மாற்றங்கள் செய்யப்படுகின்றன.
இந்த மசோதா நாடாளுமன்றத்தின் நீதித்துறை தேர்வுக் குழுவால் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இந்த மசோதா சட்டமாக மாறுவதற்கு முன்பு அதை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பது குறித்து குழு பரிந்துரைகளை வழங்கும்.
வெளிநாட்டு தலையீடு என்றால் என்ன?
வெளிநாட்டு தலையீடு என்பது, ஒரு வெளிநாட்டு அரசாங்கம் நியூசிலாந்தின் சமூகத்தில் இரகசியமான, கட்டாயப்படுத்தப்பட்ட அல்லது நேர்மையற்ற வழியில் தலையிட முயற்சி செய்வது ஆகும். இந்த செயல்பாடு நியூசிலாந்திற்கும் மற்றும் நம் சமூகங்களுக்கும் தீங்கு விளைவிக்கும்.
வெளிநாட்டு தலையீடு மொத்த நாட்டையும் பாதிக்க முடியும். உதாரணமாக, இது தேசிய பாதுகாப்பு, பொருளாதாரம், நமது தேர்தல்கள் அல்லது அரசாங்க முடிவுகளை பாதிக்க முடியும்.
தலையீடு தனிநபர்களையும் சமூகங்களையும் பாதிக்க முடியும். ஒரு வெளிநாட்டு அரசாங்கம் அவர்களுக்கோ அல்லது அவர்களது குடும்பங்களுக்கோ என்ன செய்யக்கூடும் என்பதன் காரணமாக மக்களை செயல்பாடுகள் பாதுகாப்பற்றதாக உணர செய்யலாம் அல்லது விஷயங்களைச் செய்ய அல்லது சொல்ல பயப்படலாம். இது சரியல்ல, ஏனென்றால் நமது சட்டங்கள் மக்களுக்கு உரிமைகளையும் சுதந்திரங்களையும் வழங்குகின்றன, மேலும் வெளிநாட்டு அரசாங்கங்கள் இங்குள்ள மக்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முயற்சிக்கக்கூடாது.
சட்டம் எப்படி மாற்றப்படுகிறது?
நியூசிலாந்துக்கு எதிராக எந்தவொரு நாட்டினாலும் ஏற்படும் வெளிநாட்டுத் தலையீட்டையும் ஏற்க முடியாது.
புதிய குற்றங்கள் வெளிநாட்டு தலையீடு மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் நடவடிக்கைகளை சட்டவிரோதமாக்கும். இவைகள் நியூசிலாந்தில் மிகவும் கடுமையான குற்றங்களில் சிலவாக இருக்கும். முக்கியமான அரசாங்க தகவல்களை சிறப்பாக பாதுகாக்க தற்போதுள்ள குற்றங்களும் மாற்றப்படுகின்றன.
இந்த மாற்றங்கள் ஒரு வெளிநாட்டு அரசாங்கத்திற்காக தீங்கு விளைவிக்கும் செயல்களைச் செய்பவர்களை நம் குற்றவியல் சட்டத்தின் கீழ் தடுத்து நிறுத்தி தண்டிக்க முடியும் என்பதாகும்.
நான் எப்படி என் கருத்தைச் சொல்ல முடியும்?
பாராளுமன்றத்தின் நீதித் தெரிவுக்குழு, "சமர்ப்பிப்புகளுக்கு அழைப்பதன் மூலம்" மசோதா மீதான தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறது.
மசோதா மற்றும் சமர்ப்பிப்பு செய்வது பற்றிய கூடுதல் தகவல்களை ஆன்லைனில் இங்கே காணலாம்: https://bills.parliament.nz/v/6/5c7f002d-e4b4-4573-5563-08dd042d0cd2?Tab=history
இக்குழு பொதுவாக நாடாளுமன்றத்தின் இணையதளத்தில் சமர்ப்பிப்புகள் பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்கிறது. சமர்ப்பிப்பதற்கு முன்பு, உங்கள் சமர்ப்பிப்பு வெளிப்படையாக இருக்க விரும்பவில்லை என்றால், அதை ரகசியமாக வைத்திருக்குமாறு குழுவிடம் கேட்கலாம். உங்கள் சமர்ப்பிப்பை அனுப்புவதற்கு முன்பு குழு இதற்கு ஒப்புக்கொள்ள வேண்டும்.
நீதி அமைச்சகத்தின் இணையதளத்தில் வெளிநாட்டு தலையீடு, மசோதா மற்றும் வெளிநாட்டு தலையீட்டை நீங்கள் அரசு நிறுவனங்களுக்கு எவ்வாறு தெரிவிக்கலாம் என்பது பற்றிய தகவல்களும் உள்ளன. அமைச்சகத்தின் முக்கிய முன்முயற்சிகள் வலைப்பக்கத்தில் உள்ள “வெளிநாட்டு தலையீட்டை எதிர்த்தல்” என்ற பிரிவில் இதைக் காணலாம்: https://www.justice.govt.nz/justice-sector-policy/key-initiatives/countering-foreign-interference